நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்க கூட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல், செயலாளர் ஆதிசேஷன் பங்கேற்றனர்.கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது நேர்த்திக்கடனாக தண்ணீர் பீய்ச்ச நீதிமன்றம் உத்தரவுபடி மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.
இதுகுறித்து விளம்பரம்செய்யாமலும், பதிவு முறை துவங்காமல் இருப்பதும் பக்தர்களை சிரமத்திற்குள்ளாக்கும். இதுகுறித்து அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

