sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சான்றிதழ் பதிவுக்கு ‛'சிங்கிள் விண்டோ போர்ட்டல்' தொழில் மையங்களுக்கு தனி அதிகாரி தேவை

/

சான்றிதழ் பதிவுக்கு ‛'சிங்கிள் விண்டோ போர்ட்டல்' தொழில் மையங்களுக்கு தனி அதிகாரி தேவை

சான்றிதழ் பதிவுக்கு ‛'சிங்கிள் விண்டோ போர்ட்டல்' தொழில் மையங்களுக்கு தனி அதிகாரி தேவை

சான்றிதழ் பதிவுக்கு ‛'சிங்கிள் விண்டோ போர்ட்டல்' தொழில் மையங்களுக்கு தனி அதிகாரி தேவை


ADDED : ஜூன் 19, 2024 04:47 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : நிறுவனங்களுக்கான சான்றிதழ் பதிவுக்கு 'சிங்கிள் விண்டோ போர்ட்டல்' உருவாக்குவதோடு மாவட்ட தொழில் மையங்களை மண்டல அளவில் இணைத்து ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் தனி அதிகாரியை நியமித்து தொழில் வளர்ச்சிக்கு உதவவேண்டும் என தொழில் நிறுவனப் பிரதிநிதிகள் மதுரையில் தெரிவித்தனர்.

தொழில் நிறுவனங்களை நடத்துபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையங்களில் எந்த மாவட்டத்தில் எந்தெந்த தொழில்கள் இருக்கின்றன, எவ்வளவு முதலீடு செய்யப்படுகிறது, எத்தனை தொழிலாளர்கள் பணி செய்கின்றனர், எந்தெந்த தொழில் வளர்ச்சி பாதையில் செல்கிறது, எது நலிவடைந்து வருகிறது போன்ற தகவல்கள் இல்லை. எளிதாக தொழில் செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3ம் இடத்தில் உள்ளது. அதேபோல மாவட்டங்களுக்கு இடையே தரவரிசை பட்டியல் ஏற்படுத்தினால் தான் போட்டி ஏற்பட்டு தொழில் வளர்ச்சி பெறும்.

'சிங்கிள் விண்டோ போர்ட்டல்' தேவை:

தொழிற்சாலைகள் துவங்க, புதுப்பிக்க ஒவ்வொரு துறையிலும் சான்றிதழ் பெற தனித்தனியாக 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு துறையின் கீழ் குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் பெறாவிட்டால் தான் 'சிங்கிள் விண்டோ' தளத்தின் கீழ் பதிவு செய்ய முடியும். சில அரசு துறைகள் இத்தளத்தில் இணைக்கப்படவில்லை. வெளிநாடுகளில் சான்றிதழ் பெறுவதற்கு கூட 'சிங்கிள் விண்டோ' நடைமுறையை பயன்படுத்துகின்றனர். எல்லா துறைகளையும் 'சிங்கிள் விண்டோ' போர்ட்டலின் கீழ் இணைக்க வேண்டும். அதன் மூலம் எந்தெந்த துறையில் சான்றிதழ் தர தாமதமாகிறது என்பதை கண்காணிக்க முடியும். லோக்கல் பிளானிங் அதாரிட்டிக்கு தனி அனுமதி பெற வேண்டியுள்ளது. டி.டி.சி.பி., ல் தொழிற்சாலை வகைப்பாட்டியல் ஒப்புதலில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க இதையும் 'சிங்கிள் விண்டோ' முறையில் கொண்டு வர வேண்டும்.

தற்போதுள்ள 'சிங்கிள் விண்டோ' நடைமுறையில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருக்கு அதிகாரம் இல்லை. மற்ற துறைகளிடம் தொழில் நிறுவனங்களுக்கான சான்றிதழ் நிலுவையில் இருந்தால் வேண்டுகோள் வைத்து கேட்கும் நிலையில் தான் தொழில் மையம் உள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையங்களை 4 அல்லது 5 மண்டலங்களின் கீழ் கொண்டு வந்து ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் தனி அதிகாரியை நியமித்து 'சிங்கிள் விண்டோ' முறையை கண்காணித்து தவறுகளை உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.

துறைசார்ந்த வல்லுனர்கள் தேவை:

ஜி.எஸ்.டி., தொழிலாளர் சட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வருமான வரி, சட்டத்துறை சார்ந்த ஒவ்வொரு பதிவேட்டுக்கும் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. சிறு தவறு நேர்நதாலும் அதிகமான அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. இதை சரிசெய்ய மாவட்ட தொழில் மையத்தில் துறைசார்ந்த வல்லுனர்களை நியமிக்க வேண்டும். மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் மானியம் கிடைப்பதும் காலதாமதமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us