/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கட்டுப்படியாகாது: எண்ணெய் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
/
ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கட்டுப்படியாகாது: எண்ணெய் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கட்டுப்படியாகாது: எண்ணெய் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு கட்டுப்படியாகாது: எண்ணெய் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
ADDED : ஜூலை 06, 2024 06:12 AM
மதுரை : உணவுப் பாதுகாப்புத்துறை சட்டப்படி எண்ணெய் வணிகம் செய்பவர்கள் தங்களது ஒவ்வொரு பேக்கிங் பொருளுக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வகத்திற்கு கொடுத்து சான்றிதழ் பெற கூடுதல் கட்டணம் ஆகிறது. இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் சங்கத்தலைவர் அருணாச்சலம், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது: எண்ணெய் தயாரிப்பாளர்களும், மறு பேக்கிங் செய்பவர்களும் 100 மில்லி, 200 மில்லி, அரை, ஒரு லிட்டர் என பல்வேறு அளவுகளில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உட்பட ஒவ்வொரு எண்ணெய்க்கும் பேக்கிங் செய்து விற்கிறோம். ஒரே நிறுவனத்தில் 5 வகை எண்ணெய்க்கு குறைந்தது 10க்கும் மேற்பட்ட அளவுகளில் பேக்கிங் செய்யப்படும் போது அத்தனை பேக்கிங் பொருளையும் தேசிய அங்கீகாரம் பெற்ற (என்.ஏ.பி.எல்.) ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டியுள்ளது. ஒவ்வொரு பேக்கிங்கிற்கும் ரூ.700 முதல் கணக்கிட்டால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அனைத்து பேக்கிங் பொருட்கள் தரத்தை ஆய்வு செய்ய ரூ.6000 முதல் ரூ.8000 செலவாகிறது. சிறு நிறுவனங்களுக்கு இது பெரிய சுமையாக உள்ளது. பெரு நிறுவனங்கள் சொந்த ஆய்வகம் வைத்திருப்பதால் பிரச்னையில்லை.
ஆய்வுக்கு அனுப்பும் போது தரமான எண்ணெய் அனுப்பி விட்டு சான்றிதழ் பெற்று தரமில்லாத எண்ணெயை பொதுமக்களுக்கு விற்பதற்கும் இதில் வாய்ப்புள்ளது. இந்த சான்றிதழ் பெறுவதால் எங்களுக்கோ பொதுமக்களுக்கோ எந்த லாபமும் இல்லை. சில நேரங்களில் சான்றிதழும் முரண்பாடாக கிடைக்கிறது. எனவே இந்த நடைமுறைக்கு பதிலாக உணவுப் பாதுகாப்புத் துறையினர் 'ராண்டம் சாம்பிள்' எடுத்து ஆய்வு செய்தால் தான் உண்மையான தரம் தெரிய வரும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆய்வகப் பரிசோதனை என்பதை ரத்து செய்யவேண்டும் என்றனர்.