ADDED : ஜூலை 11, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, கணினி அறிவியல் துறை சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவர் அப்துல் ரசாக் வரவேற்றார். பேராசிரியர் மதுஸ்ரீ அறிமுக உரையாற்றினார்.
மதுரை டெக் அஸோசியேட் எலுசியம் அகாடமி நிர்வாகி விஜய் பேசினார். பேராசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார். கணினி அறிவியல் துறைத் தலைவர் தேவிகா, பேராசிரியர்கள் சந்தியா, பாலப்பிரியா ஒருங்கிணைத்தனர்.

