ADDED : ஜூலை 14, 2024 04:10 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் வட்டார வேளாண் தொழில் நுட்ப முகமை திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுப்புராஜ் துவக்கி வைத்தார். உதவி இயக்குனர் மயில் வரவேற்றார். 'அட்மா' திட்ட துணை இயக்குனர் சிவ அமுதன் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், விதை பரிசோதனை, விதை சான்று நடைமுறைகள், பதிவு செய்தல்,அவற்றில் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வேளாண் கல்லுாரி அறிவியல் மைய தலைவர் சுப்பிரமணியன் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களில் விதை உற்பத்தி அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.
விதை சான்று உதவி இயக்குனர் சிங்காரவேலன், வேளாண் அலுவலர் வசந்தகுமார், திட்ட தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், சவுந்தர்ராஜன், வசந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

