/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டுமான தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கட்டுமான தொழிலாளருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : மார் 03, 2025 04:05 AM
மதுரை : மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் இன்ஜினியரிங் கிளப் தமிழ்நாடு, அல்ட்ரா சிமென்ட் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தார். ஸ்ரீ பூ கலாசார மையம் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கிளப் மாநிலத் தலைவர் செல்வதுரை பேசுகையில், ''கட்டுமான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் சிவில் படிப்பை தேர்வு செய்வது குறைந்து விட்டது. கட்டுமானத்தில் பொருட்களின் தரம் பற்றி தொழிலாளர்களிடம் கேட்டால் சரியாக மதிப்பு கொடுப்பார்கள்'' என்றார்.
தென் பிராந்திய தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ''இந்தியாவில் கட்டுமானம் சார்ந்த வரி அதிகமாக செலுத்தப்படுகிறது. கட்டுமான துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
நலவாரியத்தில் அனைவரும் பதிவு செய்தால் ஆபத்து காலங்களில் அரசாங்கம் மூலம் உதவிகள் கிடைக்கும்'' என்றார். கட்டுமானத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும், நீர், கம்பிகள் பயன்பாடு குறித்தும் அவற்றை எவ்வாறு தேர்வு செய்வது, எம்.சாண்ட் தரம் பற்றியும், கான்கிரீட்டின் அடிப்படை எப்படி இருக்க வேண்டும்.
மணலின்முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மாநிலச் செயலாளர் ரமேஷ்குமார், மாநில துணைச் செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர். மதுரைத் தலைவர் ரவிக்குமார், மைய பொருளாளர் ராமசாமி, வெங்கடேஷ் சான்றிதழ் வழங்கினர்.