/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டப்பகலில் ரேஷன் பச்சரிசி கடத்தல்
/
பட்டப்பகலில் ரேஷன் பச்சரிசி கடத்தல்
ADDED : ஏப் 05, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை தல்லாகுளம் கமலா தெரு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. நேற்று மதியம் மூடை மூடையாக அரிசி கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பாலமுருகன் என்பவர் ஆதாரத்துடன் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
குடிமைப்பொருள் பறக்கும் படை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்ததில், 68 கிலோ பச்சரிசி இருப்பு இல்லாதது தெரிந்தது. கடத்தப்பட்டது உறுதியானதை தொடர்ந்து அபராதம் விதிக்கப்பட்டது. விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

