ADDED : செப் 12, 2024 05:05 AM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் சோலார் எனர்ஜி மற்றும் சிறு ரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் கட்டண பயிற்சி நடத்தப்படுகிறது.
செப்.14, 15ல் நடக்கும் சோலார் பயிற்சியில்சோலார் பி.வி., மற்றும் தெர்மல் சிஸ்டம், இன்ஸ்டாலேசன், ஆன் க்ரிட், ஆப் கிரிட் சிஸ்டம், கனெக்ஸன்ஸ், சிஸ்டம் காம்போனன்ட்ஸ், சோலர் இன்வெர்ட்டர்ஸ், பேட்டரிஸ், டிசைன், ஒயரிங் டயகிராம், லோடு கணக்கீடு, ஆர்.ஓ.ஐ. சோலார் சிஸ்டம் பராமரிப்பு பற்றி விளக்கப்படும்.
செப்.23 முதல் 25 வரை நடத்தப்படும் ரசாயன பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில் கம்ப்யூட்டர் சாம்பிராணி, டிஷ் வாஷ், வாஷிங் பவுடர், கிளினிங் பவுடர், முகப்பவுடர், டாய்லெட், துணிகள், தரை துடைக்கும் திரவம், ஷாம்பூ, பினாயில், திரவ சோப், கண்டிஷன் பவுடர், பெயின் பாம் செயல்விளக்கம் கற்றுத் தரப்படும். குறைந்தது எட்டாம் வகுப்புக்கு மேல் படித்த ஆண், பெண் பங்கேற்கலாம்.
பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி.எஸ்.டி., சான்றிதழ் நகலுடன் அணுகலாம். அலைபேசி: 86956 46417.