ADDED : ஆக 19, 2024 03:26 AM
மதுரை : மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா பள்ளியில் ஜெகதாம்பா விளையாட்டு சங்கம் சார்பில் தென்னிந்திய கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கடந்த 2 நாட்களாக நடந்த போட்டியை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பா.ஜ., மாநில செயலாளர் ராஜரத்தினம், 20 வது வார்டு அ.தி.மு.க., செயலாளர் சித்தன் கலந்து கொண்டனர். ராயல் குழுமப் பள்ளிகளின் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் சகிலா தேவி, இயக்குனர்கள் தீபிகா, கெவின் குமார், மகிமா, பிரேம்குமார், விக்னேஷ், பள்ளி முதல்வர் பிரியதர்ஷினி, துணைத் முதல்வர் அருள் பிரகாஷ், ராயல் பப்ளிக் பள்ளி முதல்வர் முத்துராஜ் பங்கேற்றனர்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30 க்கும் மேற்பட்ட அணிகள் போட்டியிட்டன. ஜெகதாம்பா விளையாட்டு சங்கத் தலைவர் பகலா சிங், துணைத் தலைவர் ஓம் சிங், செயலாளர் அனில் சிங், பொருளாளர் கிரிதர் சிங், மோகன் சிங் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கங்கா சிங், பகவான் சிங், ஹரிசிங், விக்ரம் சிங், தினேஷ், சுரேஷ், ரவீந்தர் ஏற்பாடுகள் செய்தனர்.
நேற்று பரிசளிப்பு விழா நடந்தது. போட்டியில் சென்னை அணி முதல் பரிசும், பெங்களூரு அணி 2ம் பரிசையும் பெற்றன. மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் ஜெயராம், செயற்குழு உறுப்பினர் தனசெல்லம், 1வது வார்டு வட்ட தி.மு.க., செயலாளர் தேவராஜ் பரிசு வழங்கினர்.

