/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குறுவைக்கு முன் பசுந்தாள் பயிரிடுங்க
/
குறுவைக்கு முன் பசுந்தாள் பயிரிடுங்க
ADDED : மே 29, 2024 04:47 AM
மதுரை, : ''மண் வளத்தை மேம்படுத்துவதற்கு குறுவை நெல் சாகுபடிக்கு முன்பாக விவசாயிகள் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிட வேண்டும்'' என மேலுார் விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநர் கமலாலட்சுமி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பசுந்தாள் உரம் என்பது பசுமையான சிதைக்கப்படாத பொருட்களை உரமாக பயன் படுத்துவது. பசுந்தாள் உர விதைகளை நிலத்தில் விதைத்து அந்த தாவரம் பூ பூக்கும் முன் அதே நிலத்தில் மடக்கி உழுது அடுத்து இடும் பயிருக்கு உரமாக்க வேண்டும். மேலும் மரம் செடி கொடிகளின் தழைகளையும் நிலத்தில் இட்டு மடக்கி உழவு செய்யலாம். இது பசுந்தழை உரம் எனப்படும். மண் வளமாக இருக்க வேண்டுமெனில் குறுவை சாகுபடி செய்யும் முன் நிலத்தில் பசுந்தாள் உரங்களை விவசாயிகள் பயிரிடலாம். சணப்பை, தக்கைபூண்டு, கொழிஞ்சி போன்ற பசுந்தாள் உர தாவரங்கள் காற்றில் உள்ள நைட்ரஜனை கிரகித்து வேர் மற்றும் தண்டு முடிச்சு வாயிலாக நிலத்தில் தழைச்சத்தை சேமிக்கிறது.
கோடை உழவு செய்த பின் பசுந்தாள் பயிர்களை ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ அளவு விதைக்கலாம். நீர்ப்பாசனம் செய்து 40 முதல் 50 வது நாளில் அவற்றை மடக்கி உழவு செய்வதால் குறுவை நெல் சாகுபடி செய்ய பயன்படும். 15 முதல் 20 சதவீதம் விளைச்சல் அதிகம் பெறலாம் என்றார்.