ADDED : ஆக 08, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையர்: பேரையூர் பகுதியில் 3 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்கிறது. இதை பயன்படுத்தி மானாவாரி விவசாயிகள் டி. குன்னத்துார், சோலைப்பட்டி, பாப்பு நாயக்கன்பட்டி, காரைக்கேணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் விதைப்பு பணி துவங்கியுள்ளனர்.
இங்குள்ள மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம், தினை, குதிரைவாலி, கேழ்வரகு, பயறு வகைகள், பருத்தி, மக்காச்சோளம் விதைக்கப்பட்டன.
விவசாயிகள் கூறுகையில், ''நிலத்தை உழவு செய்து தயாராக வைத்திருந்தோம். மழை பெய்ததால் ஈரத்தைப் பயன்படுத்தி விதைக்கிறோம் என்றார்.