ADDED : செப் 05, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக (டி.ஐ.ஐ.சி.) மதுரை கிளை சார்பில் சிறப்பு தொழிற்கடன் விழா கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.
டி.ஐ.ஐ.சி. மண்டல மேலாளர் கார்த்திகேயன், நிதி ஆலோசகர் பாண்டா, மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், மடீட்சியா தலைவர் லட்சுமிநாராயணன், கப்பலுார் தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாதராஜா கலந்து கொண்டனர். 5 தொழில்முனைவோருக்கு ரூ.18.19 கோடி காசோலை கலெக்டர் சங்கீதா வழங்கினார். மேலும் ரூ.7.29 கோடிக்கான கடன் அனுமதி ஆணை, ரூ.6.28 லட்சத்திற்கு வட்டி மானியம் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ரூ.14 கோடியில் தொழில் துவங்குவதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டது.