நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர்கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் வஸந்த உற்சவ விழா மே 14ல் துவங்கி 23 வரை நடக்கிறது.
மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் பூதேவி, ஸ்ரீ தேவியுடன் சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் எழுந்தருள்வார். பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை 5:00 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு ஆடி வீதியில் உலா வந்து ராமர் சன்னதி வழியாக பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி செல்வார்.
அங்கிருந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணைக் கமிஷனர் கலைவாணன் செய்து வருகின்றனர்.