ADDED : ஜூலை 16, 2024 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யூ.,), தென்னக ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓடும் தொழிலாளர் பிரிவு கோட்ட செயலாளர் அழகுராஜா தலைமை ஏற்றார். எஸ்.ஆர்.எம்.யூ., செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் ரவிசங்கர், சபரிவாசன், செந்தில், சீதாராமன், ஜூலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 2004ம் ஆண்டுக்கு பிறகு வேலைக்கு சேர்ந்தோர் ஓய்வு பெறும்போது ரூ.2000 கூட பென்சன் கிடைக்கவில்லை. ரூ.56 ஆயிரம் ஓய்வூதியம் பெற வேண்டிய லோக்கோ பைலட்டிற்கு ரூ.5000 கூட தரப்படவில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

