ADDED : ஜூலை 16, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் சுந்தரராஜா தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் கலைவாணன் துவக்கி வைத்தார். 79 மாணவர்களுக்கு கிச்சடி, சாம்பார், சர்க்கரை பொங்கல், லட்டு வழங்கப்பட்டன. அறங்காவலர் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர் செல்வராஜ், மேலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் உலகநாதன், வட்டார கல்வி அலுவலர் அழகுமீனாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அடக்கன், வலையபட்டி ஊராட்சிதலைவர் தீபா தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

