ADDED : மே 10, 2024 05:15 AM
மதுரை: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மதுரையில் கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி.,அரவிந்த், டி.ஆர்.ஓ., சக்திவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஓட்டு எண்ணிக்கை மையங்களில் பல தொகுதிகளில் கேமராக்கள் அவ்வப்போது பழுதாகின்றன. எனவே இதனை தவிர்த்து பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் தடையின்றி இயங்க வேண்டும். அதற்காக யு.பி.எஸ்., ஸ்டெபிலைசர் பயன்படுத்தி, இடி, மின்னல்களில் இருந்து தடை ஏற்படாமல் கேமராக்கள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யோசனை வழங்கினார்.