/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்
/
மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்
மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்
மாநில நல்லாசிரியர் விருது நேர்காணல் 35 பேர் பங்கேற்பு; குறையும் ஆர்வம்
ADDED : ஆக 31, 2024 06:08 AM
மதுரை : மதுரையில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நேற்று நேர்காணல் நடந்தது.
மாவட்டத்தில் 35 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு சி.இ.ஓ., தலைமையில் 8 பேர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது. அனுபவம், கற்றல் கற்பித்தலில் சாதனைகள், மாணவர்கள், பள்ளிக்கு பயன்படும் செயல்பாடுகள் உள்ளிட்ட தகுதிகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் 26 பேர் இறுதி செய்யப்பட்டு இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறைந்து வரும் ஆர்வம்
இந்தாண்டு 35 பேர் மட்டுமே விண்ணப்பித்த நிலையில் மாநில அளவில் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் ஆசிரியர்களிடையே குறைந்து வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: விருது பெற அரசியல், அதிகாரிகள் சிபாரிசு தேவை என்ற எண்ணம் ஆசிரியர்களிடையே மேலோங்கியுள்ளது. விருது பட்டியலில் விண்ணப்பிக்காதவர் பெயர் கூட வெளியாகிய குற்றச்சாட்டும் உள்ளது. இதை தாண்டி தகுதி, அனுபவம் அடிப்படையில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. இதனால் தகுதியுள்ள ஆசிரியர்கள் பலர் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தாண்டு 'எமிஸ்' மூலம் விண்ணப்பித்த நடைமுறை பாராட்டத்தக்கது. விருது பெறுவதற்கான ஆசிரியர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.