ADDED : பிப் 27, 2025 01:38 AM
சோழவந்தான்; திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் பொறியியல் துறை, சென்னை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான பல்திறன் போட்டி நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் சதீஷ் வரவேற்றார்.
போட்டிகளில் 6 கல்லுாரி மற்றும் பல்கலை மாணவர்கள் பங்கேற்றனர். ஆராய்ச்சி நிறுவன மதுரை பிரிவு டாக்டர் மகேஷ்குமார் காச நோய் தோற்றம், 2030க்குள் முற்றிலுமாக காச நோயை அகற்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மதுரை லேடி டோக் கல்லுாரி வென்றது. துணை முதல்வர் கார்த்திகேயன், உதவி பேராசிரியர்கள் அருள்மாறன், தினகரன், அசோக்குமார், சாமிநாதன் பங்கேற்றனர்.