/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வீசுக்கு சென்ற டவுன்பஸ் டோல்கேட்டில் தடுத்து நிறுத்தம்
/
சர்வீசுக்கு சென்ற டவுன்பஸ் டோல்கேட்டில் தடுத்து நிறுத்தம்
சர்வீசுக்கு சென்ற டவுன்பஸ் டோல்கேட்டில் தடுத்து நிறுத்தம்
சர்வீசுக்கு சென்ற டவுன்பஸ் டோல்கேட்டில் தடுத்து நிறுத்தம்
ADDED : செப் 12, 2024 04:59 AM
திருமங்கலம்,: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டிப்போவை சேர்ந்த டவுன் பஸ் தினசரி சாத்தூரில் இருந்து திருமங்கலத்திற்கும், திருமங்கலத்தில் இருந்து சாத்தூருக்கும் வந்து செல்லும்.
டோல் கேட்டை கடந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லாத இந்த பஸ்சில் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை. நேற்று சர்வீசுக்காக திருமங்கலம் வழியாக மதுரை டிப்போவிற்கு ஓட்டிச் செல்லப்பட்டது. கப்பலூர் டோல்கேட்டை கடக்க முயன்ற போது பஸ்சை நிறுத்திய டோல்கேட் ஊழியர்கள் பணம் கட்ட வேண்டும் அல்லது பாஸ்ட் டேக் மூலம் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி பஸ்சை விட மறுத்துள்ளனர்.
பஸ்சை ரிவர்ஸ் எடுத்த டிரைவர் டோல்கேட் அருகே ஓரமாக நிறுத்திவிட்டு சாத்தூர் டிப்போவிற்கு தகவல் தெரிவித்தார். பஸ்சின் பாஸ்ட் டேக் ஸ்டிக்கர் ரீசார்ஜ் செய்யப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு டோல்கேட்டை கடந்து சென்றது. இதனால் 15 நிமிடங்கள் அந்த பஸ் டோல்கேட்டில் காத்திருந்தது.
இதேபோல் திருப்பரங்குன்றம் டிப்போவை சேர்ந்த ஸ்பேர் பஸ் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டது. இதிலும் பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்ததால் டோல்கேட் ஊழியர்கள் பஸ்ஸை விட மறுத்துள்ளனர். பின்னர் பாஸ்ட் டேக் ரீசார்ஜ் செய்யப்பட்டு பஸ் கிளம்பிச் சென்றது. பயணிகளோடு இந்த பஸ் டோல்கேட்டில் 20 நிமிடங்கள் காத்திருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினார்.