ADDED : ஆக 09, 2026 04:52 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: டி.கல்லுப்பட்டி லார்டு வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் கழிவு பொருட்களைக் கொண்டு கலைப்படைப்புகளை மாணவர்கள் உருவாக்கினர்.
மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனைத் திறன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் 747 மாணவ, மாணவியர் பங்கேற்று கழிவுப் பொருட்களில் இருந்து கலைப் பொருட்களை உருவாக்கினர். அவர்களை பள்ளி முதல்வர் சந்திரா பாராட்டி, மறுசுழற்சியின் அவசியத்தையும், கழிவுப் பொருட்களை பயனுள்ள பொருட்களாக மாற்றும் திறன் பற்றியும் பேசினார்.
