ADDED : ஆக 09, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரியில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ரவீந்திரன் வரவேற்றார். கல்லுாரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 22 பேராசிரியர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஓய்வு பேராசிரியர்கள் பாபுலால், பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், விஷ்ணு ராம், ஜெயக்குமார், பாலாஜி, மோகன், குபேந்திரன், சுரேந்திரன் பேசினர். இரு மாதங்களுக்கு ஒரு முறை சந்திப்பது என தீர்மானித்தனர். ஓய்வு பேராசிரியர்கள் மன்றமும் துவக்கினர்.
தலைவராக ராஜேந்திரன், துணைத் தலைவராக சித்ரா, செயலாளராக ரவீந்திரன், இணைச்செயலாளராக வெங்கடேசன், பொருளாளராக யுவராஜன் தேர்வு செய்யப்பட்டனர். சுரேந்திரன் நன்றி கூறினர்.
