நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுரர் ஒன்றியத்தில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் வேளாண்மை பணி அனுபவ திட்ட பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தண்டலையில் மாணவி ஆர்த்தி விவசாயிகளுக்கு பிங்க் நிறமி பேக்கலபேட்டிவ் மெத்திலோட்ராய்ஸ் குறித்து விளக்கமளித்தார். மகசூல் 10 சதவீதம் அதிகரிக்கவும், வறட்சியை தணிக்கவும் இது பயன்படுகிறது என்பதை விவசாயிகளுக்கு செயல் முறையில் விளக்கினார்.
மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவி கோமதி தென்னையில் காண்டமிருக வண்டு மேலாண்மை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
வாடிப்பட்டி தென்னை விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டு தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மை குறித்து விளக்கினார்.