
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தான் முதலியார் கோட்டை வெங்கடாசலபதி நகர் தேங்காய் உரிக்கும் தொழிலாளி சண்முக குமார்- - வாசுகி தம்பதி. இவர்களுக்கு லட்சுமி 12, ஜனஸ்ரீ 9, ஸ்ருதி 6, ஆகிய மகள்கள் இருந்தனர்.
நேற்று மாலை பேட்டை பகுதி மெட்ரிக் பள்ளி முடிந்து மகள்களை தாய் வாசுகி டூவீலரில் ஏற்றி வந்தார். பேட்டை பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது கருப்பட்டியிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ் டூவீலரின் பின் மோதியது. இதில் கீழே விழுந்ததில் தலைக்காயமடைந்த ஜனஸ்ரீ சோழவந்தான் அரசு மருத்துவமனையில் இறந்தார். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.