ADDED : செப் 07, 2024 05:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: மதுரை அருகே சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவர் பழனி 55; பந்தல், தோதண கொட்டகை அமைப்பாளர். இவருக்கு மூன்று மகன்கள். இவரது 2வது மகன் நவீன்குமார் 18, நாகமலை புதுக்கோட்டை கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று சிக்கந்தர்சாவடி அருகே பாசிங்காபுரத்தில் தனியார் மஹாலில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்து. அதற்கு சாலை ஓரங்களில் கட்சி கொடி கம்பங்கள் ஊன்றப்பட்டது.
மாலை கல்லுாரி முடித்து வந்த நவீன்குமாரை தந்தை பழனி உதவிக்காக கொடிக்கம்பங்களை அகற்ற அழைத்து சென்றுள்ளார். இரும்பு கொடி கம்பத்தை அகற்றிய போது மேலே சென்ற மின்சார ஒயர் மீது உரசி மின்சாரம் பாய்ந்து நவீன் குமார் இறந்தார். அலங்காநல்லுார் போலீசார் விசாரித்தனர்.