ADDED : மே 28, 2024 04:15 AM
மேலுார், : கீழையூர் சாமுவேல் ரேக்ளன்துரை 19, மேலூர் அரசு கல்லுாரியில் பி.ஏ., மூன்றாம் ஆண்டு மாணவர். இவருக்கும் தேத்தாம்பட்டியை சேர்ந்த வருணுக்கும் டூவீலரில் வேகமாக சென்றது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்று மாலை சாமுவேல் ரேக்ளான் துரையை அலைபேசியில் தொடர்பு கொண்ட வருண் கீழையூர்- தனியா மங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள குளியல் தொட்டிக்கு வருமாறு கூறினார்.
சாமுவேல் ரேக்ளன்துரை அங்கு செல்லவே வருண் மற்றும் 11 பேர் கத்தியால் குத்தி விட்டு தப்பினர். காயம்பட்டவர் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றவாளிகளை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் மேலுார் - கீழையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு சமாதானப்படுத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.