ADDED : செப் 13, 2024 05:25 AM
திருமங்கலம்: திருமங்கலத்தில் காமராஜர் பள்ளி மாணவர்கள் 5 பேர் சோழன் உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பெற ஞாபகத் திறமையை வெளிப்படுத்தினர்.
தஞ்சாவூர் தனியார் திறன் மேம்பாட்டு பயிற்சி மாணவர்கள் பிரக்னா, இவன்அமித், நீர்த்திகன்ராஜ், அஸ்வின், கயல்நேத்ரா ஆகிய ஐந்து பேரும் மனப்பாடம் செய்தவற்றை சோழன் உலகச் சாதனை புத்தக நிறுவனத்தின் முன்பு சாதனையாக நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பள்ளிச் செயலாளர் ஜெயக்கொடி முன்னிலை வகித்தார். இவான்அமித் 10, நுாற்றி மூன்று ரசாயன பெயர்களை பார்முலாவுடன் 1:12 நொடிகளில் ஒப்புவித்தார்.
பிரக்னா 9, நுாற்று ஐம்பத்தைந்து ஆங்கிலச் சொற்களுக்கு நிகழ்கால, இறந்த கால, வினைமுற்றுச் சொற்களை 2:13 நொடிகளில் கூறினார். நீத்திகான் ராஜ் 7, நுாற்றி ஒன்று ஆங்கிலச் சொற்களுக்கு எதிர்மறைச் சொற்களை 50 நொடிகளில் கூறினார்.
கயல் நேத்ரா 7, நுாற்றி தொண்ணுாற்று மூன்று உலக நாடுகளின் பெயர்களை, நாணயங்களுடன் 2 நிமிடம் 52 நொடிகளில் கூறினார். அஸ்வின் 5, கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை 1:13 நொடிகளில் எழுதினார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நீலமேகம், பொதுச் செயலாளர் ஆர்த்திகா, மாவட்ட பொதுச்செயலாளர் பால்பாண்டி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்குமரன் முன்னிலையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. மாணவர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியை சவுந்தரி. பள்ளித் தலைவர் அமிர்த பாண்டியன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், திறன் மேம்பாட்டு பயிற்சி மைய நிறுவனர் உமா பங்கேற்றனர்.

