ADDED : ஜூலை 09, 2024 05:31 AM
மதுரை: பெண் குழந்தைகளின் பாலின சமநிலையை மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்யவும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா வழிகாட்டுதல்படி, கல்விசார் செயல்பாடுகள், இலக்கிய, வானவில், அறிவியல் மன்றம், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவியர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் 25 பொறுப்பு ஆசிரியர்கள் ஒருநாள் கல்விச்சுற்றுலா சென்றனர்.
கீழடி மியூசியம், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் சென்ற மாணவர்களுக்கு உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் கல்வித்துறை மற்றும் சமூகநலத்துறை சார்பில் செய்யப்பட்டன. உதவித் திட்ட அலுவலர்கள் கார்மேகம், சரவணமுருகன், ஒருங்கிணைப்பாளர்கள் சூரியகலா, கவிப்பிரியா பங்கேற்றனர்.