ADDED : ஜூன் 25, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: நத்தம் – கருங்காலக்குடி அரசு பஸ் பெரிய கற்பூரம்பட்டி, கம்பூர் வழியாக செல்கிறது.
பஸ் சில நாட்கள் வராமலும், காலதாமதமாகவும் வருவதால் மாணவர்கள் பல கி.மீ., துாரம் நடந்தே பள்ளிக்குச் செல்கின்றனர். குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆத்திரமடைந்த மாணவர்கள் பெரிய கற்பூரம்பட்டியில் நேற்று காலை தாமதமாக வந்த பஸ்சை சிறை பிடித்தனர். நத்தம் – காரைக்குடி ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. கொட்டாம்பட்டி போலீசார் சமரசம் செய்தனர்.
