ADDED : ஜூலை 24, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : உலக பாரம்பரிய சிலம்பாட்ட சம்மேளனம், முதல் ஆயுதம் சிலம்பாட்ட பள்ளி சார்பாக தென்காசியில் நடந்த மாநில சிலம்பாட்ட போட்டியில் திருமங்கலம் மறவன் குளம் சென்டோபோசி தற்காப்பு கலைக்கூட மாணவர்கள் 20 பேர் பங்கேற்றனர்.
தனிநபர் பிரிவில் 5 முதல் பரிசும், எட்டு 2ம் பரிசும், ஏழு 3ம் பரிசும் பெற்றனர்.
முதல் ஆயுதம் சிலம்பாட்ட பள்ளி நிறுவனர் கண்ணன் பரிசு வழங்கினார் தென்காசி பொறுப்பாளர் நாகராஜ், மதுரை, விருதுநகர் பொறுப்பாளர் பொன்னுசாமி ராஜா ஏற்பாடு செய்திருந்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளி பயிற்சியாளர்கள் மனோஜ், வைஷ்ணவி ஆகியோர் பயிற்சி அளித்து இருந்தனர்.