/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து ஆய்வு: கல்வி அதிகாரி தகவல்
/
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து ஆய்வு: கல்வி அதிகாரி தகவல்
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து ஆய்வு: கல்வி அதிகாரி தகவல்
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் குறித்து ஆய்வு: கல்வி அதிகாரி தகவல்
ADDED : ஆக 30, 2024 06:13 AM
மதுரை : அங்கீகாரம் பெறாத மெட்ரிக், நர்சரி பள்ளிகள்குறித்து ஆய்வு செய்யப்படும் என மதுரையில்தனியார் பள்ளிகள் டி.இ.ஓ.,வாக பொறுப்பேற்ற சுதாகர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள்,பெறாத பள்ளிகள் விவரம் குறித்து ஆய்வு செய்யப்படும். குறிப்பாக நர்சரி பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அவை குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுத் தேர்வுகளில் தனியார் பள்ளிகளின் தேர்ச்சியை மேலும் அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மெட்ரிக் பள்ளிகளில் ஜே.ஆர்.சி., ஸ்கவுட் உள்ளிட்ட செயல்பாடுகளில் அதிக மாணவர்கள்பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.
தனியார் பள்ளிகள் கண்காணிப்பாளர் அண்ணாமலைராஜன் உடன் இருந்தார்.