/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானிய விலையில் 'பம்ப் செட் ‛சென்சார்' கருவி
/
மானிய விலையில் 'பம்ப் செட் ‛சென்சார்' கருவி
ADDED : அக் 30, 2024 04:27 AM
மதுரை : வேளாண் பொறியியல் துறை சார்பில் வயல், தோட்டத்தில் உள்ள பம்ப் செட்களை வீட்டில் இருந்த படியே இயக்கும் சென்சார்' கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இரவுநேரம் மற்றும் மழைக்காலத்தில் வயல்வெளிகளில் உள்ள பம்ப் செட்டுகளை இயக்கும் போது பாம்பு, விஷ பூச்சிகள் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் வயல், தோட்டத்தில் உள்ள பம்ப் செட்டுகளை வீட்டில் இருந்தபடியே இயக்கும் கருவி வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வழங்கப்படுகிறது.
குறுவிவசாயி, பெண் விவசாயி, எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கு கருவி வாங்குவதற்கான மொத்த செலவில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7000 வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.5000 வழங்கப்படும்.
மதுரை மாவட்டத்திற்கு 230 கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டார் வாங்குவதற்கு குறு சிறு விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் மானியம் பெறலாம். தரிசு நிலங்களில் சிறுதானிய சாகுபடிக்கு உழவு மானியமாக அதிகபட்சமாக எக்டேருக்கு ரூ.5400 மானியம் உண்டு. கூடுதல் விவரங்களுக்கு மதுரை திருப்பரங்குன்றம் ரோடு வேளாண் பொறியியல் துறை (94439 27722), உசிலம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறையை (94436 77046) அணுகலாம்.