ADDED : மே 10, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகளின் குறுவை, சம்பா பருவ சாகுபடிக்குத் தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது .
விதைக் கிராமத் திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் என்.எல்.ஆர்., 34449, ஆர்.என்.ஆர்., 15048, பி.பி.டி., 5204, கோ 55 ரக நெல் விதைகள் திருப்பரங்குன்றம், பெருங்குடி வேளாண்மை விரிவாக்க மையங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. போதிய அளவு இருப்பும் உள்ளது.
நெல் பயிருக்கு அத்தியாவசியமான நெல் நுண்ணுாட்ட உரம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. சிட்டா, ஆதார் நகல் கொடுத்து மானிய விலையில் விதை, நுண்ணுாட்ட உரம் பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.