ADDED : ஜூலை 09, 2026 09:00 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, சேடபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம் பகுதிகளில் 15 ஆயிரம் எக்டேர் பரப்பில் மக்காச்சோளம் சாகுபடியாகிறது.
குறைவாக விளையும் பிற வட்டாரங்களில் மக்காச்சோள பரப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு, மதுரையில் கூடுதலாக 870 எக்டேர் பரப்பளவில் சாகுபடியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு எக்டேருக்கு தேவையான ரூ.11,500 மதிப்புள்ள 15 கிலோ மக்காச்சோள விதைகள், எம்.என். மிக்சர் உரம், திரவ உரம், படைப்புழுவை கட்டுப்படுத்தும் திரவம் உள்ளிட்ட அனைத்தும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குறைவான சாகுபடி நடக்கும் வட்டார விவசாயிகள் வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.
