ADDED : ஆக 09, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: தாய்லாந்தில் நடந்த 4வது சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் திருமங்கலம் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு சிலம்பம்கமிட்டி, சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா, தாய்லாந்து சிலம்பம் கமிட்டி சார்பில் போட்டி நடந்தது.
இந்திய சிலம்ப சங்கத் தலைவர் முகமது சிராஜ் அன்சாரி தலைமையில் 100 போட்டியாளர்கள் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டனர்.
தமிழகம் சார்பில் திருமங்கலத்தில் இருந்து 6 - 32 வயதுடைய 15 பேர் கலந்து கொண்டனர். நெடுங்கம்பு, இரட்டைக் கம்பு, வேல் கம்பு, சுருள்வாள் வீச்சு, மான் கொம்பு, வாள் வீச்சு, தொடு முறை பிரிவுகளில் 14 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்களை வென்றனர். நேற்று நாடு திரும்பிய அவர்களை தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி நிர்வாகிகள், பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் பாராட்டினர்.