ADDED : செப் 03, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூரில் முக்குச்சாலை முதல் ஜவகர் தெரு வரை 80 அடியாக இருந்த ரோடு ஆக்கிரமிப்பால் தற்போது 30 அடியாக மாறிவிட்டது.
ஆக்கிரமிப்புகளால் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. முக்குச்சாலை முதல் ஜவகர் தெரு வரை ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. ரோட்டோரங்களில் வணிக நிறுவனங்கள் நடத்துவோர் சில இடங்களில் ரோடு விளிம்பை தாண்டி தார் ரோட்டிற்கும் இடையூறு செய்யும் வகையில் கூரையை அமைத்துள்ளனர். இதனால் ரோடுகள் குறுகலாகி விட்டன.
இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. சாலையோர ஆக்கிரமிப்பாளர்களாலும் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.