/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கவர் இன்றி மாத்திரை வழங்குவதால் அவதி
/
கவர் இன்றி மாத்திரை வழங்குவதால் அவதி
ADDED : செப் 04, 2024 06:53 AM
டி.கல்லுப்பட்டி : டி.கல்லுப்பட்டி, சந்தையூர், எம். சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சந்தையூர், எஸ். மேலப்பட்டி, லட்சுமிபுரம், பாப்பையாபுரம், குமாரபுரம், எல். கொட்டணிபட்டி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருகின்றனர்.
இங்குள்ள புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தில் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. டாக்டர் வழங்கும் மருந்து சீட்டிற்கு மாத்திரைகள் வாங்க செல்வோரிடம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மாத்திரைகளை தனித்தனி கவர்களில் வழங்காமல் கைகளில் வழங்குகின்றனர்.
இதனால் நோயாளிகளுக்கு எந்த நேரம் எந்த மாத்திரையை எடுத்துக் கொள்வது என்பதில் குளறுபடி ஏற்படுகிறது. மாத்திரைகளை மாத்தி உண்பதால் உடல் உபாதைகள் அதிகரிக்கின்றன. மாத்திரை வைக்க கூடிய பேப்பர் கவர்களை வழங்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.