ADDED : மே 04, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோச்சடை அருள் முருகன்,28. மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் சுமை துாக்கும் தொழிலாளியாக இருந்தார். விளாங்குடி பகுதியில் சென்றபோது, சிலர் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.
கூடல்புதுார் போலீசார் வழக்கு பதிந்தனர். அனுப்பானடி வீட்டுவசதி வாரிய காலனியை சேர்ந்த இருள்ராஜ்,25, மதுரை (ஜெ.எம்.,4) நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் வைக்க நீதிபதி பாக்கியராஜ் உத்தரவிட்டார்.