/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி
/
குன்றத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி
ADDED : மார் 12, 2025 01:17 AM
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 5ம் நாள் திருவிழாவாக நேற்று சுவாமி கை பாரம் நிகழ்ச்சி நடந்தது.
மார்ச் 5ல் துவங்கிய பங்குனி திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
நேற்றிரவு சுவாமி, தெய்வானை 2 டன் எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினர். சீர்பாதங்கள், கிராமத்தினர், பக்தர்கள் உள்ளங்கைகளில் வாகனத்தை தலைக்குமேல் துாக்கி கொண்டு கொத்தாளமுக்கு முதல் கோயில் வாசல் வரை ஓடினர்.
தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று (மார்ச் 12) சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 16ல் சூரசம்ஹாரம், 17ல் பட்டாபிஷேகம், 18ல் திருக்கல்யாணம், 19ல் தேரோட்டம், மார்ச் 20ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.