ADDED : செப் 04, 2024 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பூம்சே, க்யூரூகி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 26 தங்கம், 17 வெள்ளி, 13 வெண்கல பதக்கம் வென்று, சப் ஜூனியர் பிரிவில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். சென்னை ஓ.எம்.ஆர். டேக்வாண்டோ அகாடமி செயலாளர் மாஸ்டர் வெங்கடேசன், அமெச்சூர் மதுரை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்கம் செயலாளர் கார்த்திக் பரிசு வழங்கினர்.
வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் பிரகாஷ்குமார், சஞ்சீவ், பிலால், புவனேஸ்வரி, விஜய் அருணாச்சலம் பாராட்டினர்.