ADDED : ஆக 07, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றியம் பொன்னமங்கலம் ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரம் ஆதிதிராவிடர் காலனிக்கு அருகில் சிறுவர் பூங்கா மற்றும் நீர் வரத்து கால்வாய் உள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்வாய் மற்றும் சிறுவர் பூங்காவை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகிறார். அந்த பகுதி மக்கள் செக்கானுாரணி போலீசில் சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர். போலீசார் எச்சரித்த நிலையில் வீடு கட்டும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்டோர் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து கலைந்தனர்.