ADDED : ஜூலை 08, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: உச்சபட்டி ஊராட்சி கோமாளி ஒத்த வீடு கிராமத்தில் 30 வீடுகள் உள்ளன.
150 பேருக்கு மேல் வசிக்கின்றனர். சிலர் பாதையை மறைத்து பிளாட் அமைத்துள்ளதால் கிராமத்திற்கு செல்ல வழியின்றி 2 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி நேற்று திருமங்கலம் தாலுகா அலுவலகத்தை பள்ளி குழந்தைகளோடு முற்றுகையிட்டனர். உணவு சமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், போலீசார் சமரசத்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
