தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ குண்டர் சட்டத்தில் பெண் கைது

குண்டர் சட்டத்தில் பெண் கைது

குண்டர் சட்டத்தில் பெண் கைது


UPDATED : ஜூலை 08, 2026 09:30 PM

ADDED : ஜூலை 08, 2026 09:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2026 09:30 PM ADDED : ஜூலை 08, 2026 09:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையைச் சேர்ந்த பிரேமலதா, ரமேஷ் ஆகியோர் 'க்யூன் டிரேடிங்' என்ற பெயரில் தாங்கள் நடத்தி வரும் ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்தைக்கூறி மக்களிடம் அதிக முதலீடுகளை பெற்று மோசடி செய்தனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் பிரேமலதா, ரமேஷ் கைது செய்யப்பட்டனர். பிரேமலதாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

டூவீலர்கள் மோதல்: மாணவர் பலி

திருப்பரங்குன்றம்: தேனி மாவட்டம் கம்பம் பகுதி முகமது இஸ்மாயில் மகன் இம்ரான்கான் 18. விருதுநகர் தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர். அதனால் குடும்பத்துடன் மதுரை ஆனையூரில் வசித்தார். இம்ரான்கான் தினமும் திருப்பரங்குன்றம் ரயில்வே ஸ்டேஷனில் டூவீலரை நிறுத்திவிட்டு ரயிலில் கல்லுாரிக்கு சென்று வந்தார். நேற்று காலை கல்லுாரிக்கு டூவீலரில் சென்றபோது பசுமலை மூலைக்கரை பஸ் ஸ்டாப் பகுதியில் தியாகராஜர் காலனியில் இருந்து வந்த டூவீலர் மோதியதில் இம்ரான்கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

ஒருவர் பலி

கொட்டாம்பட்டி: சேக்கிபட்டி மணிமாறன் 56. மாலை மேலுார் - கருங்காலக்குடிக்கு டூவீலரில் சென்றார். கச்சிராயன்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் டூவீலர் மோதியதில் இறந்தார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us