நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : நொண்டிக்கோவில்பட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு உலக அமைதி வேண்டி திருவிழா நடந்தது.
வழிபாட்டு மன்றத்தில்இருந்து நிர்வாகிகள் ஜோதிலெட்சுமி, பனிமலர் தலைமையில் பெண்கள் 600 பேர் கஞ்சிக் கலயம், 50 தீச்சட்டிகள் மற்றும் முளைப்பாரிகளை 108 பேர் எடுத்து வந்தனர். ஊர்வலத்தின் முன்பு ஆதிபராசக்தி அம்மன் அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிறகு மீண்டும் வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர்.