/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த கலெக்டர்
/
அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த கலெக்டர்
ADDED : ஆக 28, 2024 05:44 AM
மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் இருட்டாக உள்ள பகுதிகளை கலெக்டர் சங்கீதா, போலீஸ் துணை கமிஷனர் மதுக்குமாரி தலைமையில் மருத்துவ, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோல்கட்டாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை அடுத்து தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள இருட்டான பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.
பழைய மகப்பேறு வார்டு பின்புறப்பகுதி, குழந்தைகள் நல வார்டு பகுதி மற்றும் பிற பகுதிகளை கலெக்டர் பார்வையிட்டார். தற்போது எத்தனை வழிகள் உள்ளன என்பதையும் கேட்டறிந்தார். மேலும் இரவு நேரத்தில் மதுரை அரசு மருத்துவமனை முன்பாக பேரிகார்டு இருப்பதால் டாக்டர்கள் வைகை ஆற்றுப்பாலம் வழியாக அரசு மருத்துவமனை முன்புற வாசலுக்கு வருவதற்கு சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இரவு 9:00 மணி முதல் காலை 6 :00 மணி வரை பேரிகார்டை அகற்ற கலெக்டர் பரிந்துரை செய்தார். இந்த ஆய்வின் போது மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், ஆர்.எம்.ஓ.,க்கள் சரவணன், முரளிதரன் உடன் இருந்தனர்.