sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்

/

மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்

மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்

மதுரையில் தினமலர் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது; ஆக.,5 வரை தமுக்கத்தில் அட்டகாசமாய் ஷாப்பிங் செய்யலாம்


UPDATED : ஆக 03, 2024 06:57 AM

ADDED : ஆக 03, 2024 06:27 AM

Google News

UPDATED : ஆக 03, 2024 06:57 AM ADDED : ஆக 03, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களை 'ஷாப்பிங்' கால் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் தினமலர், சத்யா இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ 2024' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்கியது. இந்த ஷாப்பிங் திருவிழா ஆக., 5 வரை நினைத்துப் பார்க்க முடியாத பொழுதுபோக்கு அம்சங்களுடன் பிரமாண்டமாய் நடக்கிறது.

இக்கண்காட்சியை மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார். குழந்தைகளுக்கான போத்தீஸ் கேம்ஸ் ஸோனை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.

தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் எல். ராமசுப்பு, சத்யா நிறுவன பொது மேலாளர் வில்சன், மாநகராட்சி மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி, பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவி பொறியாளர் பொன்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்காட்சி என்றாலே அது தினமலர் கண்காட்சி தான் என வழிமேல் விழி வைத்து காத்திருந்த மக்களுக்கு இந்த ஆண்டும் பல ஆச்சர்யம், அட்டகாச அனுபவங்களை அள்ளித்தரும் கேரண்டியுடன் புதுப்புது பொருட்களும், உள்நாட்டுடன் வெளிநாடுகளின் உணவு வகைகளும் உங்கள் வருகைக்காக காத்திருக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள், குழந்தைகளுடன் இன்றே வாங்க. இது உங்கள் கண்காட்சி; உங்களுக்கான கண்காட்சி.

அணிவகுத்த பெண்கள், குழந்தைகள்


தினமலர் நடத்தும் கண்காட்சி என்பதால், கண்காட்சி துவங்கும் முன்பே பெண்கள், குழந்தைகள் ஆர்வத்துடன் தமுக்கத்தில் குவித்தனர். அழகை கூட்டும் அழகு சாதனம், பேவரிட் பேன்ஸி பேக்ஸ், டிசைனர் ஜூவல்லரி, காலணிகள், டிசைன்ஸ் சாரீஸ் ரகங்கள், விதவித ரெடிமேட் டிரஸ், வியக்க வைக்கும் ஜூட் பேக்ஸ், அசத்தலான அலங்கார மின் விளக்குகள், கலைநயமிக்க சிலைகள், மாடித் தோட்டத்திற்கான நாட்டு விதைகள் என மனதுக்கு பிடித்த பொருட்களை விரும்பி வாங்கி உற்சாகமடைந்தனர்.வெளிமாநில ஸ்டால்களிலும் மக்கள் கூட்டம் களைகட்டியது. கண்காட்சியில் பங்கேற்ற பெண்களின் வளைக்கரங்களை வண்ணமயமாக்க மெகந்தி இலவசமாக வரையப்பட்டது.

குடும்பத்துடன் மெகா ஷாப்பிங்


தினமலர் எக்ஸ்போவுக்கு வந்தவர்களில் பலர் வாஷிங் மெஷின், ஸ்மார்ட் அலைபேசி, ஹோம் தியேட்டர், கிரைண்டர், மிக்ஸி, பிரிட்ஜ், கட்டில், சோபா, ஊஞ்சல், பீரோ, லாக்கர், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவி, டிசைனர் லைட்ஸ் உட்பட விதவித ஷாப்பிங் செய்தனர். மெகா சோபா, ஊஞ்சல், சேர் செட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்து கிளம்பினர். ஸ்டால்களில் தள்ளுபடி, இலவசம், சாம்பிள்களுக்கும் பஞ்சமில்லை.

ரசிக்க.. சுருசிக்க..சுவைக்க...


'ஷாப்பிங்' செய்த திருப்தியில் அருகே இருந்த புட் கோர்ட் பக்கம் சென்ற மக்கள் அங்கிருந்த மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா உருண்டை, பீட்சா, பர்கர், நண்டு லாலிபாப், பிஷ் பிரை, ஸ்பைரல் சிப்ஸ், ஜூஸ், பனியாரம், கரும்பு ஜூஸ், மூலிகை டீ என போட்டி போட்டு வாங்கி ருசித்தனர்.

குட்டீஸ்கள் குதுாகலம்


குழந்தைகளுக்கான பிரத்யேக போத்தீஸ் கேம் ஸோனில் ஆடிப்பாடி விளையாட ஏராள கேம்ஸ்கள் இடம் பெற்றுள்ளன. டிவிஸ்டர் கேம், ஷார்க் கேம், பிக் டிரையின் மினி டிரையின், வாட்டர் ரோலர், ஏ.டி.வி., பைக், எலக்ட்ரிக் கார், வாட்டர் போட், பேஸ்கட் பால், பலுான் ஷூட், ஆர்ச்சரி, ஒட்டக சவாரி என குழந்தைகள் துள்ளிக்குதித்து மகிழ்ந்தனர். கலர் பலுான்களும் இலவசமாக வாங்கி மகிழ்ந்தனர்.

டூவீலர், கார் பார்க்கிங் வசதி, அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ உதவி, ஈசி டெக்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமரா வசதி என நீங்கள் ஜாலி ஷாப்பிங் செய்ய பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்னும் 3 நாட்களே


இப்பிரமாண்ட கண்காட்சி திங்கள் வரை இன்னும் 3 நாட்களே நடக்கவுள்ளது. கண்காட்சியை பார்க்க குழந்தைகளுடன் வாங்க. விரும்பிய பொருட்களை அள்ளிட்டு போங்க.

இணைந்து கரம் சேர்ப்போர்: அசோசியேட் ஸ்பான்சர் ஆனந்தா அண்ட் ஆனந்தா, முத்து மெட்டல், கோ ஸ்பான்சர் லட்சுமி கிரைண்டர், அல்ட்ரா பெர்பெக்ட். ஆடியோ ஸ்பான்சர் இன்போ பஸ்.






      Dinamalar
      Follow us