/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேம்பால பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
/
மேம்பால பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
ADDED : மார் 25, 2024 06:17 AM

சோழவந்தான், : சோழவந்தான் புதிய ரயில்வே மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ரயில்வே மேம்பாலம் பணிகள் 2013ல் துவங்கியது. பத்தாண்டுகள் மேம்பால கட்டுமானம் நடந்தது. நீண்ட இழுபறிக்குப்பின் சமீபத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு பாலம் திறக்கப்பட்டது. திறந்த சில மாதங்களிலேயே பாலத்தில் பள்ளம் ஏற்படுள்ளது.
ரயில்வே மேம்பாலத்தின் மையப்பகுதியில் உருவான பள்ளத்தை கடந்து செல்லும் வாகனங்கள் பாதிப்பதுடன், பள்ளமும் விரிவடைந்து கொண்டே போகிறது. விபரீதம் நிகழும் முன் பள்ளத்தை சீரமைக்க வேண்டும். பாலத்தின் பிற பகுதிகளையும் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

