/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேத்தி இறந்த துக்கத்தில் அழுத பாட்டியும் பலி
/
பேத்தி இறந்த துக்கத்தில் அழுத பாட்டியும் பலி
ADDED : ஏப் 27, 2024 04:51 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே போல்நாயக்கன் பட்டியைசேர்ந்த தவமுருகன், அய்யரம்மாள் மகள் அனிஷா 3, உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அனிஷா நேற்று இறந்தார்.
இவரது உடல் நேற்று மாலை போல் நாயக்கன்பட்டியில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வந்த தவமுருகனின் பெரியம்மா நாகம்மாள் 70, பேத்தியின் உடலை பார்த்து கதறி அழுததில் மயங்கி விழுந்தார். திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர்இழந்தார். அவரது உடல் சொந்த ஊரான ஏழுமலை அருகே உள்ள பேரையம்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று முன்தினம் நாகம்மாளின் தங்கை (தவ முருகனின் அம்மா) சென்னக்கம்மாள் உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். அடுத்தடுத்த நாட்களில் ஒரே வீட்டைச்சேர்ந்த பாட்டிகள், பேத்தி பலியான சம்பவம் கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

