/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தாச்சு... நெல் கொள்முதல் என்னாச்சு...
/
அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தாச்சு... நெல் கொள்முதல் என்னாச்சு...
அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தாச்சு... நெல் கொள்முதல் என்னாச்சு...
அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தாச்சு... நெல் கொள்முதல் என்னாச்சு...
ADDED : பிப் 08, 2026 06:43 AM

மேலுார்: மேலுாரில் அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நம்பி நெல் மூடைகளை குவித்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இ.மலம்பட்டியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி விவசாயிகள் மனு கொடுக்கவே, ஜன.25ல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை நம்பி சேன்டலைப்பட்டி, கீழவளவு, கொங்கம்பட்டி, உடன்பட்டி, பாப்பாக்குடிபட்டி கிராம விவசாயிகள் நெல் மூடைகளை குவித்து வைத்தனர். ஆனால் இதுவரை கொள்முதல் தொடங்கப்படவில்லை.
விவசாயி ஜெயராமன்: ஏக்கருக்கு ரூ.35,000 கடன் வாங்கி நெல் அறுவடை செய்தோம். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகளை 10 நாட்களாக தேக்கி வைத்திருக்கிறோம். இடப்பற்றாக் குறையால் வயலில் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. காலம் கடந்த அறுவடையால் நெல் உதிர்வதோடு, குருணையாக உடைகிறது. அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நம்பியதால் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. உடனடியாக நெல் கொள்முதலை துவங்க வேண்டும் என்றார்.