sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 ஓராண்டில்  240 குரங்குகள் பிடிப்பு மாவட்ட வன அலுவலர் தகவல்

/

 ஓராண்டில்  240 குரங்குகள் பிடிப்பு மாவட்ட வன அலுவலர் தகவல்

 ஓராண்டில்  240 குரங்குகள் பிடிப்பு மாவட்ட வன அலுவலர் தகவல்

 ஓராண்டில்  240 குரங்குகள் பிடிப்பு மாவட்ட வன அலுவலர் தகவல்


ADDED : பிப் 08, 2026 06:31 AM

Google News

ADDED : பிப் 08, 2026 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 240 குரங்குகள் பிடிக்கப்பட்டு கொட்டாம்பட்டி கருமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டதாக மாவட்ட வன அலுவலர் ரேவ்டி ராமன் தெரிவித்தார்.

மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் குரங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகர்மலை, நாகமலை, யானைமலை பகுதிகளில் உணவு தேடி குரங்குகள் ஊர்களுக்குள் வரு வதும், குடியிருப்பு வாசிகளின் உடைமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்து வதும் நிகழ்கிறது.

இதை தவிர்க்க வனத்துறை சார்பில் கூண்டுகள் அமைத்து குரங்குகள் பிடிக்கப்படுகின்றன. கடந்த ஓராண்டில் மாவட்டத்தில் 110 இடங்களில் கூண்டுகள் அமைத்து 240 குரங்குகள் பிடிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டன.

வன அலுவலர் ரேவ்டி ராமன் கூறியதாவது:

குரங்குகளுக்கு உணவு வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படுகிறது. உணவளிப்பதால் குடியிருப்பு பகுதி களை நோக்கி அதிகப்படியான குரங்குகள் ஈர்க்கப்படுவதுடன், அவற்றின் இயற்கையாக உணவு தேடும் பழக்கத்தை மாற்றுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட குரங்குகள் மீண்டும் ஊருக்குள் வராமல் காடுகளுக்குள்ளேயே தங்குவதை ஊக்குவிக்க, காப்புக்காடுகளின் உட்பகுதிகளில் புளி, நாவல் போன்ற பழம் தரும் உள்நாட்டு மரக் கன்றுகள் நடப்படுகின்றன.

பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளில் வனத்துறை களப்பணியாளர்கள் ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். மனிதன் - விலங்கு மோதலை தவிர்க்க நவீன வன விலங்கு மீட்பு உப கரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றார்.






      Dinamalar
      Follow us