/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தேர்தல்களில் அ.தி.மு.க., வெற்றி பெற கட்சியை இணைப்பதுதான் ஒரே வழி பன்னீர்செல்வம் பேட்டி

ADDED : ஜூலை 10, 2024 04:16 AM

அவனியாபுரம், : ''இனி வரக்கூடிய தேர்தல்களில் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டு மென்றால் கட்சியை இணைப்பதுதான் ஒரே வழி. இணையாமல் அது சாத்தியமில்லை,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது: சசிகலா சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். ஏற்கனவே நான் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். சசிகலாவும் சந்திக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெறட்டும்.
90 சதவீத தொண்டர்களை இணைத்ததாக சசிகலா கூறியதை நான் வரவேற்கிறேன்.
நான் ஒருபோதும் விசுவாசமாக இருந்தது கிடையாது என்ற பழனிசாமி கூறிய குற்றச்சாட்டிற்கு நீண்ட விளக்கத்தை அளித்திருக்கிறேன். கட்சி நன்மை கருதி இதற்கு மேல் விளக்கம் சொல்ல முடியாது.
அவரைப் போல் நான் தெனாவெட்டாகவோ, சர்வாதிகாரத்தோடு பேசமாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும்.
இனி வரக்கூடிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்றால் கட்சி இணையாமல் சாத்தியமில்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல, தொண்டர்கள், பொதுமக்களின் கருத்தும் கூட.
மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என பழனிசாமி கூறியுள்ளார்.
என்னை மன்னிப்பு கடிதம் கொடுக்கச் சொல்வதற்கு அவர் யார். பொதுச்செயலர் வழக்கு இன்னும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். உறுதியாக ஒரு தொண்டர் தலைமை ஏற்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து என்றார்.